Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு கைகொடுத்ததா தமிழக தேர்தல்?

தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என தமிழ் சினிமாவை ஆண்ட, ஆண்டுகொண்டிருப்பவர்கள் திரை நட்சத்திரங்கள் தான்.

கருணாநிதி

எழுத்தாளராக மேடைநாடகங்களிலிருந்து சினிமாவுக்கு சென்று 100 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ள கருணாநிதி தொடர்ந்து தோல்வியே சந்திக்காமல் 13வது முறையாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார். ஆனால் இவரது கட்சி ஆட்சியை பிடிக்கவில்லையென்றாலும் வலுவான எதிர்க்கட்சி தலைவராக மாறியுள்ளார்.

ஜெயலலிதா

நடிகையாக சினிமாவில் காலடி எடுத்த வைத்த ஜெயலலிதா ஏற்கனவே 5 முறை முதல்வராக பதவி வகித்த இவர் தற்போது 6வது முறையாக முதல்வராக வெற்றிபெற்றுள்ளார். அதிலும் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழக முதல்வராகியுள்ளார்.

வாகை சந்திரசேகர்

முன்னாள் நடிகர் வாகை சந்திரசேகர் முதன்முறையாக திமுக சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார்.

கருணாஸ்

காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமாகி கடந்த வருடம் நடந்த நடிகர் சங்கத்தேர்தலில் துணைத்தலைவரான கருணாஸ் தற்போது அதிமுக சார்பில் ஜாதி அமைப்பு மூலமாக திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு இதிலும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லவுள்ளார்.

விஜயகாந்த்

தமிழ் சினிமாவின் கேப்டனாக நடிகர் சங்கத்தலைவராக இருந்த விஜயகாந்த் தேமுதிக கட்சி தொடங்கி இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்தமுறை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். ஆனால் தவறான கூட்டணி முடிவால் இந்த முறை உளூந்தூர்பேட்டையில் மோசமான தோல்வியை தழுவி விட்டார்.

சரத்குமார்

ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த சுப்ரீம்ஸ்டார் சரத்குமார் கடந்த நடிகர் சங்கத் தோல்வியைத் தொடர்ந்து தற்போது அதிமுக ஆதரவுடன் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருச்செந்தூரில் போட்டியிட்டார். ஆனால் 26,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

சி.ஆர் சரஸ்வதி

குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த முன்னாள் நடிகை சி.ஆர் சரஸ்வதி அதிமுக சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு 22,165 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தேர்தல் தோல்வியால் விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு?