Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் மாடு மேய்க்க போறேன் - நீயா நானா வைரமுத்து விருப்பம்

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கிய பிறகு இளைஞர்கள் மத்தியில் கால்நடைகள் மீதான கண்ணோட்டம் மாறியிருக்கிறது.

அந்தவகையில் பிரபல நீயா நானா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசி பிரபலமானவர் வைரமுத்து என்ற பெண்.

இவரின் வெகுளித்தனமான கிராமத்து பேச்சு பலரையும் ரசிக்கவைத்திருந்தது. இவர் ஜல்லிக்கட்டு பற்றிய பேசும்போது, எங்கள் வீட்டில் எப்போதும் மாடுகள் நிறைந்திருக்கும். காலப்போக்கில் குடும்ப கஷ்டத்தால் அவற்றை விற்றுவிட்டோம். இன்றும் எனக்கு அது வருத்தமாகத்தான் இருக்கிறது.

தற்போது நான் பாண்டிச்சேரியில் ஆசிரியராக வேலை பார்க்கிறேன். விரைவில் விவசாயம் செய்யும் எனது அத்தை மகனுடன் திருமணமாகவுள்ளது. அவருடன் சேர்ந்து மாடு வாங்கி வளர்த்து விவசாயம் பண்ணப்போறேன்.

படிப்புக்காகவும், திருமணத்துக்ககாகவும் எங்கப்பா விற்ற நிலத்தை விரைவில் மீட்பேன் என்கிறார்.

படித்த இளைஞர்கள் சிலர் தங்கள் கணினி வேலையை துறந்துவிட்டு விவசாயத்துக்கு மாறிவருவது நல்ல மாற்றமாக பார்க்கப்படுகிறது.