Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடாபியை போல் நடுத்தெருவில் அடிக்கப்படுவீர்கள் - வெகுண்ட பிரபல இயக்குனர்

அனிதாவின் மரணம் தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சி தலைவர்களும் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதில் சீமானுடன் கலந்து கொண்ட அமீர், முன்னதாக 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொள்வான். ஆனால் புதிய இந்தியாவில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி கல்வி மறுக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறாள் என்றார்.

மேலும், ஆட்சிக்காக அலையும் ஆளுங்கட்சிகளுக்கு எதுவும் நிரந்தரமில்லை, ஒருநாள் கொடுங்கோல் ஆட்சி புரிந்த கடாபி பொதுமக்களால் நடுரோட்டில் மிதிபட்டு இறந்தது போல உங்களுக்கு நடக்கும் என்று வெகுண்டெழுந்து உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.