Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேச்சாற்றலை வீணாக்க வேண்டாம் - சிலையை எடுத்துவிடலாம்..ஆனால் இதை செய்ய வேண்டும் - ஸ்டாலின், சீமானுக்கு கமல் பதில்

தமிழகத்தில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்புவதையே ஒரு சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

வடமாநிலத்தில் லெனின் சிலையை உடைத்தது பிரச்சனையானது. அதற்குள் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என ஹெச்.ராஜா சொன்னது சர்ச்சையாகியுள்ளது.

இதற்கு தமிழக தலைவர்கள் மிகவும் கோபமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கமல் தன் டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.

அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு என்று கூறியுள்ளார்.