Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த பெண் இயக்குனர் என் கற்பை சூறையாடிவிட்டார் - திருட்டுப்பயலே இயக்குனர் சுசிகணேசன் கூறிய பகீர் குற்றச்சாட்டு

இந்தியா முழுவதும் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரமுத்து, ராதாரவி, நானா படேகர் போன்ற முன்னணி திரை நட்சத்திரங்கள் மீது எழுந்து வருகிறது.

இந்நிலையில் பெண் கவிஞரும், இயக்குனரும், நடிகையுமான லீனா மணிமேகலை தான் 2005ல் தொகுப்பாளினியாக இருந்தபோது தன்னிடம் காரில் இயக்குனர் சுசிகணேசன் தவறாக நடக்க முயன்றார் என்றும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிதான் தப்பித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக சுசிகணேசன் நீண்ட பதிவை இட்டுள்ளார். அதில், கையில் கத்தி வைத்திருந்த நீங்கள் அப்போதே நெஞ்சில் இறக்காமல் ஏன் இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்கள் சொன்ன பொய்யால் என் கற்பு பறிபோய்விட்டது. ஆணுக்கும் கற்பு இருக்கிறது. இதற்கு மன்னிப்பு கோராவிட்டால் நான் மானநஷ்ட ஈடு வழக்கு போடுவேன். என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.