Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை அறிந்தால் டிரைலர் விமர்சனம்

என்னை அறிந்தால் டிரைலர் விமர்சனம்
review

என்னை அறிந்தால் டிரைலர் விமர்சனம்

தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருந்த என்னை அறிந்தால் ட்ரைலர் வந்து விட்டது. ரசிகர்கள் அனைவரும் புது வருடத்தை வரவேற்க விழித்து இருந்தார்களோ தெரியவில்லை, இப்படத்தின் ட்ரைலரை பார்க்கவே வழி மீது விழி வைத்து காத்திருந்தனர்.

அவர்கள் ஆசையை கொஞ்சமும் கெடுக்காமல் சரியாக 12.00AMக்கு ட்ரைலர் வர, பின்பு சொல்லவா வேண்டும் பேஸ்புக், டுவிட்டர் என வைரலாகி உலக அளவில் ட்ரண்ட் செய்து விட்டனர்.

தல எங்க போனீங்க இவ்வளவு நாளா? என்று கேட்பது போல் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் ஒவ்வொரு ப்ரேமிலும் அடுத்து தூள் கிளப்புகிறார். சால்ட்&பெப்பர் லுக், யங் லுக், ரவுடி லுக் என வெரைய்டி காட்டியிருக்கிறார் தல.

படத்தின் சஸ்பென்ஸ் கதாபாத்திரமாக வரும் அருண்விஜய் மிரட்டியிருக்கிறார் ட்ரைலரிலேயே. த்ரிஷா இவர் நடிக்க வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் கேமராவே நம்பாது, அந்த அளவிற்கு அழகாக மின்னுகிறார்.

அனுஷ்கா அஜித்தை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரம் போல், அவர் வெட்கப்படும் போது தமிழக இளைஞர்கள் பலர் வெட்கத்தில் தலை குணிவார்கள், அந்த் அளவிற்கு தன் அழகால் கவர்ந்து இழுக்கிறார்.

படத்தின் ட்ரைலர் காட்சியமைப்புகளை வைத்து கதையை கணிக்க முடியவில்லை, அது தான் கௌதம் மேனன் ஸ்பெஷல், இதை விட ஆச்சரியம் படத்தின் வசனம், திரைக்கதை மேற்பார்வை குழுவின் ஆரண்யகாண்டம் என்ற தரமான படத்தை கொடுத்த தியாகராஜா குமாரராஜாவின் பெயர் ரசிகர்களுக்கே ஒரு டுவிஸ்ட் தான்.

ட்ரைலரின் பைனல் ஷாட்டில் இன்னொரு முறை இங்கு நின்ன உன் தல இருக்காது என நம்ம தல சொல்லும் போது ஹிம்ம்,,என்ன மிரட்டல் டயலாக் டெலிவரி.இந்த படத்தில் ஹாரிஸ் பின்னணியில் முன்னணியில் இருப்பார் போல. மொத்தத்தில் தல ஸ்டையிலேயே சொல்ல வெண்டுமென்றால் “என்ன படம் பார்க்க ரெடியா” என்பது தான்.

ரேட்டிங்-3.5/5

டிரைலரை பார்க்க க்ளிக் செய்யவும்

ரசிகர்கள் இசைவெளியீட்டு கொண்டாட்டம்