Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சண்டையா? வையாபுரி கதறி அழுதது உண்மையில் இதனால்தான்

தொடங்கியது முதல் பல சுவாரசிய நிகழ்வுகள் அரங்கேறிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கதறி அழுவது போல டீஸர் நேற்று காட்டப்பட்டது.

அதை பார்த்த பலரும் பிக்பாஸ் வீட்டில் பெரிய சண்டை வெடித்தது தான் காரணம் என கூறத் தொடங்கிவிட்டனர். காயத்ரி ரகுராம் திட்டியதால் தான் வையாபுரி கதறி கதறி அழுதார் என செய்தியும் சிலர் பரப்பிவிட்டனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு தான் உண்மை என்னவென்று தெரிந்தது. வையாபுரி தன் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து இரண்டு நாட்கள் இருந்ததை நினைத்து தான் அழுதுள்ளார். வையாபுரிக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினர்.

மனைவியோடு 16 வருடம் வாழ்ந்த வாழ்க்கையின் அருமையை இந்த இரண்டு நாட்கள் தனக்கு புரிய வைத்துவிட்டதாக வையாபுரி பின்னர் கேமராவை பார்த்து கூறியது, நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தவர்கள் கண்களில் கண்ணீரை வரவைத்துவிட்டது.