Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை விரும்ப இதுதான் காரணம்! நடிகை அனுயா

கமல் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே வெளியேற்றப்பட்டார் நடிகை அனுயா. தற்போது இந்த நிகழ்ச்சி வெற்றி அடைந்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

முட்டாள்தனமான சண்டையாக இருந்தால் கூட என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் விரும்புகின்றனர். அதாவது மற்றவர்களை விட நம் வாழ்க்கை மேம்பட்டதாக உள்ளது என்று எண்ண வைக்கிறது.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நட்சத்திர போட்டியாளர்களுடன் பார்வையாளர்கள் தங்களை ஒப்பிட்டுக் கொள்கின்றனர். அதாவது நட்சத்திரங்களுக்கும் நமக்கும் ஒரேவிதமான பிரச்சினைகளே இருக்கின்றன என்று அவர்கள் நினைக்கும் போது இதனுடன் தங்களை மேலும் தொடர்பு படுத்திக் கொள்கின்றனர்.

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் நேர்மையாக சொல்ல போனால் சாடிஸ்டிக் (மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பது) தன்மை கொண்டவை. ஆனால் மக்கள் அதை விரும்புகிறரர்கள்.

இதன்காரணமாகதான் இந்த நிகழ்ச்சி பிற மாநிலங்களிலும், நாடுகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என அனுயா தெரிவித்துள்ளார்.