பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போதைய சமூகவலைதளங்களில் டிரெண்டிங்காக உள்ளது. இதில் இதுவரை 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முதல் வாரத்தில் சினேகன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது வாரத்தில் காயத்ரி ரகுராம் தலைவரானார்.
இந்த வார தலைவருக்கான தேர்தலில் ஆர்த்தி, ஷக்தி, கணேஷ் வெங்கட்ராமன் கலந்துகொண்டனர். இதில் மணல் மூட்டை கட்டப்பட்ட கயிறை யார் அதிக நேரம் வைத்திருப்பவர்கள் தலைவராக நியமிப்பதாக கூறினர்.
இதன்படி கணேஷ் வெங்கட்ராமன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வைத்திருந்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.