பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் ஏதேனும் சர்ச்சை உருவாகிக்கொண்டே இருக்கிறது. இதில் ஏற்கனவே ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி வெளியேறி விட்டனர்.
இந்த வார எலிமினேஷனில் வையாபுரி, ஜுலி, ஆர்த்தி, ஓவியா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டனர்.
அதன்பிறகு ஆர்த்தி கேமரா முன்பு நின்று, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 10 மாமியார்கள் இருக்கிறார்கள், இவர்களிடம் சிக்கித்தவிக்கும் ஒரே அப்பாவி மருமகள் நான்தான். எனவே மக்களாகிய நீங்கள் எனக்கு ஓட்டுபோட்டால் நான் அவர்களை ஆட்டிப்படைப்பேன் என்றார்.
ஆனால் கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் ஆர்த்திக்கு பெரியளவில் ஆதரவை விட எதிர்ப்புதான் உள்ளது குறிப்பிடத்தக்கது.