Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புளுவேல் விளையாட்டாக மாறிவரும் பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுப்பகுதியை நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சமீப காலமாக போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் அவர்களை காயப்படுத்தும் படி அமைகிறது.

கொடுக்கப்படும் பெரும்பாலான டாஸ்க்குகள் மற்றவர்கள் பொருளை திருட வேண்டும், அவர்களை ஏமாற்ற வேண்டும், இரவெல்லாம் கண் முழிக்க வேண்டும், சண்டை போட வேண்டும் என்பது போன்றுதான் அமைகிறது.

இதன்மூலம் சமூகத்திற்கு என்ன கருத்துக்களை சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை. தற்போது உடலெல்லாம் க்ளிப்களை மாற்றிக்கொள்ள வேண்டும், சட்டையை கிழித்து பிச்சைக்காரர் போல இருக்க வேண்டும், உடல் முழுவதும் கடலைமாவை பூசிக்கொண்டு ஜகன்மோகினி மாதிரி திரிய வேண்டும் என புளுவேல் டாஸ்க்களை போல கொடுத்து வருகின்றனர்.

வெற்றிக்காக என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஒரே குறிக்கோளாக மாற்றிவருகிறது.