Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓட்டுக்காக கிராம மக்களை ஏமாற்றுகிறாரா சினேகன்?

கவிஞர் சினேகன் தற்போது பிக் பாஸ் வீட்டின் இறுதி போட்டியாளராக நுழைந்துவிட்டார். "நான் பிக் பாஸ் டைட்டில் வென்றால் வரும் 50 லட்சம் ரூபாயை கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் பிக்பாஸ் நூலகம் அமைத்து அதை கமல் கையால் திறக்க செய்வேன்" என இன்று கூறினார் சினேகன்.

வெற்றி பெற்றால் அந்த மேடையிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என அவர் மேலும் உறுதியளித்தார்.

ஆனால் இதுப்பற்றி பின்னர் பேசிய நடிகர் ஹரிஷ், "ஓட்டு வாங்குவதற்காக தான் சினேகன் கிராமங்கள் பற்றி பேசி அனுதாபத்தை உருவாக்குகிறார்" என குற்றம் சாட்டினார்.