Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியலிலும் அஜித்தை பயன்படுத்திய தேஜஸ்- எப்படி தெரியுமா?

முன்பெல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடிய சீரியல்கள் இருக்கும். ஆனால் இப்போது தொலைக்காட்சிகள் முழுவதும் நிறைய சீரியல்களாக தான் இருக்கிறது. இதன்காரணமாகவே சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காத பல பேர் சீரியல்களில் வாய்ப்பு தேடுகிறார்கள்.

அப்படி அஜித்தை போலவே இவர் இருக்கிறார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தேஜஸ். இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் கல்யாணமாம் கல்யாணம் என்ற சீரியலில் நடிக்கிறார்.

இந்த சீரியலில் இவரின் பெயர் சூர்யா, நாயகியின் பெயர் கமலி. இதை படித்தவுடன் அஜித் ரசிகர்களுக்கு என்ன சொல்ல வருகிறோம் என்பது தெரிந்திருக்கும்.

அஜித், தேவயானி நடித்த காதல் கோட்டை படத்தில் சூர்யா, கமலி அவர்களின் கதாபாத்திர பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.