Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி. கிராமிய பாடல்களை ஒவ்வொரு வாரமும் பாடி ரசிகர்களை அசத்தி வருகின்றனர்.

எம்.ஏ பட்டதாரியான செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இருவரும் பல நிகழ்ச்சி மேடைகளில் ஒன்றாக இணைந்து பாடல்கள் பாடி பிரபலமானார்கள். பின் இவர்களுக்குள் காதல் ஏற்பட 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிராமிய பாடல்களால் பிரபலமான இவர்கள் நிறைய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் சென்றனர்.

பின் செந்தில் கணேஷ் திருடு போகாத மனசு என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அதில் ராஜலட்சுமியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேடை நிகழ்ச்சியில் சந்தித்த பிரபலங்கள் மூலம் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர்.

இப்படி இசையை தாண்டி சமூக பிரச்சனைக்காகவும் இவர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ராஜலட்சுமி கருவுற்ற நிலையில் தனது கணவருடன் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் சாதாரணமாக இருக்கும் இவர்கள் இப்படியெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.