Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்றல் சீரியலால் மன வருத்தத்தில் இருக்கும தீபக்- சீரியல் கலைஞர்களுக்கு இப்படி ஒரு கஷ்டமும் இருக்கிறதா?

சின்னத்திரை கலைஞர்களும் மக்களை மகிழ்விக்கவே நிறைய விஷயங்கள் செய்கின்றனர். சீரியல்களை தாண்டி மக்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் வந்துவிட்டது.

அப்படி சின்னத்திரையில் தொகுப்பாளர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர் தீபக். இவர் சமீபத்தில் சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்து ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் பேசும்போது, தென்றல் சீரியலுக்காக இவருக்கு சிறந்த ஜோடி என்ற விருதை தமிழக அரசு அறிவித்திருந்தது.

2009ல் இருந்து 2014 வரையிலான விருது பற்றி அறிவித்தார்கள். ஆனால் விருது எதுவும் கையில் கிடைக்கவில்லை, இதையெல்லாம் அரசு சரியாக செய்திருந்தால் என்னுடன் இருக்கும் மற்ற கலைஞர்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கும். நிறைய கலைஞர்களுக்கு அது மன வருத்தமாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.