Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டப்பிங் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி

டப்பிங் சீரியல்களுக்கு தமிழ் சினிமாவின் சின்னத்திரை கலைஞர்கள் அதிகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

கடந்த சில வருடங்களாக நிறைய முன்னணி தொலைக்காட்சிகளில் அதிக டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன, இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று போராட்டம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் ராஜ் தொலைக்காட்சி டப்பிங் சீரியல்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று அதிரடி முடிவு எடுத்திருக்கிறது.

இதுநாள் வரை தினமும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த டப்பிங் சீரியல்களுக்குப் பதிலாக, இனி நேரடி தமிழ் சீரியல்கள் ஒளிபரப்பப்பட இருக்கின்றன.

இதனால் மக்களிடம் டப்பிங் சீரியல்களின் தாக்கம் குறையும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.