Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார் விபத்து சம்பவத்தில் என்ன நடந்தது- பிரபல தொலைக்காட்சி பிரபலம் சுனிதா தகவல்

பிரபல தொலைக்காட்சியில் எந்த ஒரு நடன நிகழ்ச்சி என்றாலும் அதில் பங்குகொள்பவர் சுனிதா. வேறொரு நாட்டில் இருந்தது வந்திருக்கும் இவருக்கு தமிழ் அவ்வளவாக வராது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே.

கடந்த சில நாட்களாக இவர் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதில் விபத்து ஏற்படுத்திவிட்டார் என்று வீடியோக்கள் வெளியாகின. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை பற்றி தெரிவித்துள்ளார் சுனிதா.முதலில் நான் மது அருந்தவே மாட்டேன், எனக்கு கார் ஓட்டவும் தெரியாது. எப்போது எனது காரை ஓட்டுனர் தான் ஓட்டுவார், அதோடு எப்போதும் அவர் குடித்திருக்கிறாரா என்பதை நான் பார்ப்பேன்.

அந்த சம்பவத்தின் போது நான் என் காரின் பின்னால் தூங்கிக் கொண்டு வந்திருந்தேன். எனது ஓட்டுனர் செய்தது தவறுதான், ஆனால் மக்கள் நான்தான் குடித்துவிட்டு காரை ஓட்டு விபத்து ஏற்படுத்திவிட்டேன் என்று நினைத்துக் கொண்டனர்.

என் காரால் விபத்தில் சிக்கியரை பார்த்தேன் அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.

ஆனால் மக்கள் ஏன் இவ்வளவு கோபமாக என்னை தவறாக நினைத்துக் கொண்டு பேசினார்கள் என்பது புரியவில்லை. முதலில் மொழி அவ்வளவாக தெரியாததால் எனக்கு தெளிவாக அவர்கள் பேசியது புரியவில்லை, ஆனால் என்னை தவறாக நினைத்துக் கொண்டார்கள் என்பது மட்டும் புரிந்தது என தெரிவித்துள்ளார்.