சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை! முதன் முதலாக லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட உண்மை
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி மக்களிடம் எத்தனை பெரிய விமர்சனங்களை பெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக அண்மையில் தகவல் பரவியது. மதுரை உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளாக சொல்லப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சி தான்.
இந்நிலையில் லட்சுமி இது பற்றி விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய அடுத்த படத்தில் நான் பிசியாக இருக்கிறேன். அதனால் சமூகவலைதளம் பக்கம் வரவில்லை.
இது தற்காலிக தடை தான். நாங்கள் எங்கள் தரப்பு ஞாயங்களை புரியவைத்து வருகிறோம். ஆனால் எதுவும் விவாதம் செய்ய விரும்பவில்லை.
அதில் கவனம் செலுத்த போவதில்லை என கூறியிருக்கிறார்.
My next directorial venture has commenced in full swing, may not be active on social media for a while, need your prayers & wishes 🙏 reg the show, it is a temporary ban & we have to clear our side, but I am not keen to argue ANYMORE, Channel will tc, I am moving forward ❤️
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) June 5, 2018