Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாடல் வாய்ப்புகளால் ரமணி அம்மாளுக்கு இப்படி ஒரு கஷ்டமா?

அந்த கால பாடல்களை பாடி தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் ரமணி அம்மாள்.

சரிகமபா என்ற பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் இவர் வீட்டு வேலைகள் செய்து வந்திருக்கிறார். பாடல் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய நேரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி அவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், திருச்சி, மதுரை என்று பாட கூப்பிடுகிறார்கள், வேலை பார்க்கிற வீடுகளில் விடுமுறை கொடுக்க மிகவும் யோசிக்கிறார்கள்.

அதனால் எட்டு வீடுகளில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டேன். இப்போது இரண்டே வீடுகளில் வேலை பார்க்கிறேன், இந்த வீடுகளின் வேலை போய்விடக்கூடாது அதை பார்த்துக் கொள்வது உன்னுடைய பொறுப்பு என்று ஆஞ்சநேயரிடம் சொல்லிக்கிட்டேன் என்று கண்கலங்க பேசியுள்ளார்.