Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆண்கள் Vs பெண்கள் என மாறும் பிக்பாஸ் வீடு- கடுப்பில் போட்டியாளர்கள்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை ஏற்றிக்கொண்டே போகிறது. இதனால் இதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்த ஆர்வத்தை பார்வையாளர்களிடம் இருந்து குறையாமல் இருக்க தினமும் ப்ரோமோக்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வந்துள்ள ப்ரோமோவில் போட்டியாளர்களிடையே கடும் வாக்கு வாதம் ஏற்படுவது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தற்போது எஜமானர்கள், அடிமைகள் என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடிமைகள் எஜமானர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுவதில் சண்டை ஏற்படுகிறது.

இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரிய பூகம்பம் வெடிப்பது போன்று உள்ளது. மேலும் அனைவரும் சென்ட்ராயனுக்காக மஹத் மற்றவர்களிடம் வாதம் செய்கிறார். ஆக இந்த சண்டை சென்ட்ராயனால் ஏற்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கு இரவு 9 மணிக்கு தான் விடை தெரியும்.