Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் 2 சீசனை ஜெயிக்கும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது- பிரபலத்தின் கணிப்பும், ரசிகர்களின் கணிப்பும் ஒருவரே

தமிழில் பிக்பாஸ் 2 சீசன் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அனைவரின் உண்மை முகமும் வெளியே வர ரசிகர்களும் அவர்களை மும்முரமாக கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்.

16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இருந்து மமதி சாரி, அனந்த் வைத்தியநாதன் இருவர் வெளியேறிவிட்டனர். இதில் அனந்த் வைத்தியநாதன் வெளியே வந்த பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

அதில் ஒன்றில் யார் பிக்பாஸ் 2 சீசனை ஜெயிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டதற்கு, டேனியலுக்கு ஜெயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு எல்லாம் தெரியும், ஸ்வீட்டான ஒரு மனிதர்.

எல்லாவற்றிக்கும் அவர் தயார் கண்டிப்பாக ஜெயிப்பார். மக்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பது தெரியாது, உள்ளே இருந்து பார்த்ததில் எனக்கு அவர் ஜெயிப்பார் என்று தோன்றுவதாக பேசியுள்ளார்.

அதேபோல் ரசிகர்களுக்கும் டேனியல் ஜெயிப்பார் என்பது தான் கருத்து.