Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சகபோட்டியாளரை திட்டும் மஹத்! மூன்று பேருக்கிடையே முற்றும் போட்டிகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் ஒரு தனி பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. முந்தய சீசன் போல இல்லை என்பது பலரின் கருத்து. ஆனால் எதை எதையோ செய்து மக்களை கவரவைக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பொன்னம்பலம் காப்பாற்ற பட்டதோடு நேற்று நித்யா வெளியேறினார். பாலாஜி மற்றும் மகளுக்கிடையே அப்பா, மகள் ஃபீலிங் நெகிழ்வாக இருந்தது.

நேற்றைய நிகழ்வுகள் கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது எனலாம். இந்நிலையில் இந்த வாரம் தலைவர் போட்டி கொஞ்சம் வித்தியாசமாக நடத்தப்படுகிறது. இதில் மஹத், பாலாஜி, ஷாரிக் இடையே போட்டி வைக்கப்படுகிறது.

அவர்களுக்கு மாலை போட்டு சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக வைஷ்ணவி, யாஷிகா, செண்ட்ராயன் போட்டியில் இறங்குகிறார்கள். நீச்சல் குளத்திற்குள் கிடக்கும் சாவிகளை கண்டு எடுத்து அவர்களை திறந்து விட வேண்டும். சென்ட்ராயன் சொதப்புகிறார். இதனால் மஹத் அவரை திட்ட ஆனால் மஹத் தலைவர் இல்லை என்பது தெரிகிறது.