Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறப்பதற்கு முன் இதை தான் சொன்னா! நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து கதறி அழுத தாய்!

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகை பிரியங்கா கடந்த 18ம் திகதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரியங்காவுக்கு கணவர் மற்றும் குடும்பத்தால் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. அவரின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவனையில் பிரியங்காவின் சடலம் வைக்கப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது.

உடலைப்பார்த்து கதறிய பிரியங்காவின் தாய் கூறுகையில், கடையை விரிவாக்கம் செய்யபோகிறேன் என்றும், பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்கு வந்து விடு என்றும் பிரியங்கா இறப்பதற்கு முன்னர் என்னிடம் கூறினார். என் மகள் சாகும் மனநிலையில் என்னிடம் பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் சக நடிகைகள் வந்த போது அவர்கள் தோள் மீது சாய்ந்தபடியும், பிரியங்கா சடலத்தை பார்த்தும் அவர் தாய் அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.