Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலைஞர் குடும்பத்தில் இவர் எனக்கு நெருக்கம்! பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்ட மஹத்

முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெற்று, மெரினாவில் அண்ணா சமாதி அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவு பற்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதை கேட்டு பலரும் அதிர்ச்சி ஆகினர்.

நடிகர் மஹத் பேசும்போது " துரை தயாநிதி அழகிரி எனக்கு நெருங்கிய நண்பர். இந்த சமயத்தில் அவர் அருகில் இருக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது" என கூறினார்.

தயாநிதி அழகிரி பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.