Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாஷிகா காதலை நிராகரித்த மஹத்? இதற்காகத்தான் கதறி அழுதாரா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் துவங்கிய நாளில் இருந்தே நெருக்கமாக இருந்து வருகின்றனர் யாஷிகா மற்றும் மஹத். எனக்கு வெளியில் காதலி இருப்பதாக மஹத் கூறினாலும் அவர் யாஷிகாவிடம் நெருக்கமாகவே இருந்தார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஹரிஷ் கல்யாண் மஹத்தை பார்த்து "யாஷிகா-மஹத் உறவு நட்பை தாண்டி புனிதமானது!" என கேட்டார். அதற்கு யாஷிகா உட்பட எல்லோரும் "Yes" என காட்டினர். ஆனால் மஹத் மட்டும் No காட்டினார்.

இதை பார்த்த யாஷிகா பின்னர் மும்தாஜ் மடியில் படுத்துக்கொண்டு கண்ணீர் விட்டார். "அவன் என்மீது அன்பு காட்டினான். அவன் கண்ணில் அது தெரிந்தது" என கூறி அழுதார். "நீ அவனை காதலிக்க ஆரம்பிச்சுட்ட” என சொல்லி வேறு சில அட்வைஸ் கொடுத்தார் மும்தாஜ்.