Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்புக்கு நடுவே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிரபல நடிகர்! எதிர்பாராத போட்டியாளர்கள் - கலை கட்டப்போகும் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இந்தியா முழுக்க பரவிவிட்டது. தொலைக்காட்சி சீரியல் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி தமிழ் பிக்பாஸ் சீசன் 2 தொடங்கிய சில நாட்களுக்கு முன்பு தான் ஆரம்பித்தது.

இந்த வரும் செப்டம்பர் மாதத்தில் 100 வது நாளை எட்டி நிகழ்ச்சி முடியப்போகிறது. இந்நிலையில் பிரபல நடிகரும் நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனா பிக்பாஸ் வீட்டிற்கு போகவுள்ளாராம்.

அவர் தற்போது தேவதாஸ் படத்தில் நடித்து வருகிறார். இதில் நானியும் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரமோஷனுக்காக பிக்பாஸ் செல்கிறார்களாம். செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ட்ரியை எதிர்பார்க்கலாம்.