Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண் என்று கூட பார்க்காமல் தகாத முறையில் நடந்த மஹத்! திட்டித்தீர்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள்

நடிகர் மஹத் தான் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் என சொல்லும் அளவுக்கு பல்வேறு மோசமான விஷயங்களை செய்து வருகிறார்.

நேற்று அவர் டேனியலை தாக்கிய நிலையில் இன்று அவர் ரித்விகாவை நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளிவிட்டார். இது மற்ற போட்டியாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பாலாஜி இந்த சம்பவம் பற்றி மும்தாஜிடம் வாக்குவாதத்தில்ஈடுபட்டார். அப்போது அவர் "இதை பார்க்கும் மக்கள் காரி துப்புவாங்க.. பெண்னிடம் இப்படியா நடப்பது.. நடவடிக்கை எடுத்தால் அவன் உள்ளே போக வேண்டியதுதான்" என கூறினார்.

நேற்று டேனியை தாக்கியபோது அமைதி காத்த மற்ற போட்டியாளர்கள், இன்று பெண் என்றதும் பொங்கி எழுந்து மஹத்தை திட்டி தீர்த்துள்ளனர்.

அது மட்டுமின்றி கன்வேயர் பெல்ட்டில் மூலப்பொருட்கள் எடுக்கும் போது மஹத் ஐஷ்வர்யாவை மார்பில் கைவைத்து தள்ளியதாக குற்றம்சாட்டினார்.