Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நித்யா கூறியும் திருந்தாத தாடி பாலாஜி, வேலையை ஆரம்பித்துவிட்டார்- இந்த முறை இப்படியா?

பிக்பாஸ் வீட்டில் கடந்த 2,3 நாட்களாக போட்டியாளர்களின் உறவினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதில் சென்ராயன் மனைவி வந்தது தான் ஹைலைட் என்றே கூறலாம்.

தான் கர்ப்பமாக இருப்பதாக கயல்விழி கூற, சென்ராயன் மகிழ்ச்சியில் அப்படி கத்துகிறார். பின் இருவருக்கும் வீட்டில் சில விஷேச சம்பவங்கள் நடந்தது. உறவினர்கள் வருகையால் கிசுகிசு பேசாமல் இருந்த தாடி பாலாஜி இப்போது ஆரம்பித்துவிட்டார்.

எப்போதும் யாராவது ஒருவரை பற்றி தான் மற்றவர்களிடம் பேசுவார். ஆனால் இந்த முறை டேனியிடம் வீட்டில் இருக்கும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் பற்றியும் பேசுகிறார். இனி சண்டை வெடிக்க போகிறது, விட்டில் இருக்கும் அவர்கள் அனைவரும் மஹத் தான் என்று கூறுகிறார்.