Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்பாடா! சரவணன் மீனாட்சில இருந்து தப்பிச்சு வந்துட்டேன் - ரக்ஷிதா உருக்கம்!

தமிழ் தொலைக்காட்சியில் எத்தனை சீரியல்கள் வந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத சீரியல் சரவணன் மீனாட்சி.

காதல் காட்சிகள் அதிகமாக இருந்த இந்த சீரியல் போக போக அம்மன், பேய், பாகுபலி என என்னென்னவோ செஞ்சு ரசிகர்களை வெறுப்பேத்த தொடங்கிவிட்டனர்.

6 வருஷத்துக்கு மேல ஓடிய சீரியல் சமீபத்தில் தான் முடிந்தது.

இதுபற்றி மீனாட்சியாக நடித்த ரக்ஷிதா கூறுகையில், எனக்குமே ஒருவழியாக இந்த சீரியல் முடிந்துவிட்டது என்று தோன்றுகிறது. இப்போதுதான் வாழ்க்கையில் எவ்வளவு விஷயத்தை மிஸ் பண்ணிட்டேன் என்று தெரிகிறது.

ஜெயிலிலிருந்து தப்பி வந்தது போல இருக்கிறது. பாகுபலி கதையெல்லாம் வைத்தபோது எனக்கே ஓவர் என்று தெரிந்தது. வேறுவழியில்லாமல் நடித்தேன் என்று ஓபனாக போட்டுடைத்துள்ளார்.