Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிகாரமாக போட்டியாளரை வீட்டைவிட்டு வெளியேற சொல்லும் மும்தாஜ்- அவருக்கு என்ன உரிமை இருக்கிறது, வெடித்த பிரச்சனை

பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நேற்று வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் சென்ராயன். மக்களுக்கு மிகவும் பிடித்தவராக இருக்கும் அவர் எப்படி வெளியேறினார் ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருக்கிறது.

அடுத்த வார எலிமினேஷனில் பெரிய டுவிஸ்ட் வைத்துள்ளார் பிக்பாஸ். போட்டியாளர்கள் ஒன்றாக சேர்ந்து 2 பேரை வெளியேற்ற நாமினேட் செய்ய கூறியிருக்கிறார்.

இதில் மும்தாஜ், விஜியை இப்போது தானே Wild Cardல் உள்ளே வந்துள்ளீர்கள், நீங்கள் வெளியே போங்கள் என்று கூறியது போல் தெரிகிறது. இதற்கு விஜி பதிலடி கொடுக்க பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே பெரிய பேச்சு வார்த்தை நடக்கிறது.

இறுதியில் பிக்பாஸ் 2 பேரை இதுவரை நீங்கள் தேர்வு செய்யாத காரணத்தால் எலிமினேஷனுக்கு 3 பேரை தேர்வு செய்தாக வேண்டும் என்று ஆர்டர் போடுகிறார். கடைசியில் யார் யார் எலிமினேஷனுக்கு இந்த வாரம் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.