Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போதே பரிதாபமாக உயிரிழந்த பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் உள்ள தூர்தர்ஷன் கேந்திரா நிலையத்திற்கு மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளர் டாக்டர் ரீட்டா ஜிதேந்திரா வந்திருக்கிறார்.

அந்த தொலைக்காட்சியில் குட் மார்னிங் என்ற நிகழ்ச்சியில் நன்றாக பேசிக் கொண்டிருந்த ரீட்டா திடீர் என்று இருக்கையின் பின்னால் சாய்ந்து மேலே பார்த்தபடி மூச்சுவிடத் திணறினார்.

இந்த சம்பவம் காலை 8.30 மணியளவில் நடந்தது, அவரை எஸ்.எம்.ஹெச்.எஸ். மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவரின் மரண செய்தி தொலைக்காட்சி பணியாளர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.