Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்ராயனுக்கு குவிந்த பாராட்டுக்கள்- தனுஷ், சிவகார்த்திகேயன், சதீஷ் என்ன சொன்னாங்க தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவர் சென்ராயன். அவர் வீட்டில் இருந்து வெளியே வருவார் என்று யாரும் நினைக்கவில்லை.

அவர் வெளியே வந்ததும் முதல் ஆளாக சிம்பு சென்ராயனை வீட்டிற்கு அழைத்து வாழ்த்து கூறியதோடு நல்ல படங்களாக தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதோடு தனுஷும் சென்ராயனை பற்றி விசாரித்துள்ளாராம். சிவகார்த்திகேயன் சந்தோஷமா இருக்கனும், எதற்கும் கவலைப்படக்கூடாது, உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.

வெற்றிமாறன் அவர்கள் நேரில் சந்தித்து, நீ பெரிய ஆளாக வருவாய் என வாழ்த்தியுள்ளாராம்.

சதீஷும் சென்ராயனுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இப்படி பல பிரபலங்கள் நேரில் சந்தித்தும், மெசேஜ் அனுப்பியும் வாழ்த்து கூறி வருகிறார்கள் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சென்ராயன்.