Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன் என்னிடம் இதை கூறி வருத்தப்பட்டார்! சினேகன் பேச்சால் கதறி அழுத மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடியப்போகும் நிலையில் முதல் சீசன் போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர்.

இன்று கவிஞர் சினேகன் அனைவர் முன்னிலையில் பேசும்போது கமல்ஹாசன் பற்றி பேசினார். இரண்டாவது சீசன் பற்றி அவரிடம் கமல் தனியாக 25 நிமிடம் பேசினாராம். போட்டியாளர்களுக்கு நல்ல புகழ் கிடைக்கிறது ஆனால் நல்ல வாய்ப்பை இவர்கள் வீணடிக்கிறார்கள் என சொல்லி வருத்தப்பட்டாராம்.

அனைவரிடமும் இப்படி அன்பு செலுத்தும் கமலுக்கு மரியாதை கொடுப்பது அவசியம். அவர் இருக்கும் போது சிலர் கால் மீது கால் போட்டு அமர்ந்திருப்பது வருத்தமாக உள்ளது என சினேகன் கூறி கண்கலங்கினார்.

இதயெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மும்தாஜ் கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.