Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் ஆரவ் மீண்டும் மருத்துவ முத்தம்?

முதல் சீசன் டைட்டில் வின்னர் நடிகர் ஆரவ் தற்போது இரண்டாவது சீசன் வீட்டுக்குள் வந்துள்ளார். ஒரு நாள் மட்டும் வீட்டுக்குள் இருந்த அவர் மருத்துவ முத்தம் கொடுத்துள்ளார்.

முதல் சீசனில் அவர் நடிகை ஓவியாவுக்கு கொடுத்த மருத்துவ முத்தம் கொடுத்தது பெரிய சர்ச்சையானது. ஆனால் அவர் இந்த முறை கொடுத்தது காமெடிக்காகத்தான்.

நடிகர் தாடி பாலாஜி பெண் போல சேலை அணிந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆரவ்விடம் சென்று ரொமான்ஸ் செய்வது போல நடித்தார். மற்ற போட்டியாளர்கள் மருத்துவ முத்தம் வேண்டும் என கேட்டு கத்தினர். ஆரவ்வும் முத்தம் கொடுப்பது போல நடித்துள்ளார்.

இது நாடகம் போல அரங்கேறினாலும் மற்ற போட்டியாளர்கள் ஆரவ்வை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.