Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐஸ்வர்யா பைனல் போகவே கூடாது! பிக்பாஸில் இன்று அவர் செய்த தில்லுமுல்லு - கடும் கோபத்தில் மற்ற போட்டியாளர்கள்

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸில் தற்போது கொடுக்கப்படும் டாஸ்குகள் மிகவும் கடினமாக மாறியுள்ளது.

ஒரு போட்டியாளரை அவுட்டாக்க மற்ற போட்டியாளர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என கூறப்பட்டதால், சிலர் தண்ணீர், பெப்பர், சோப்பு, முட்டை என பல விதமாக டார்ச்சர் செய்துள்ளனர்.

ஆரம்பம் முதலே ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் கூட்டணியாக சேர்ந்து மற்ற போட்டியாளர்கள் டார்ச்சர் செய்தனர்.

ஆனால் யாஷிகா டாஸ்க் செய்ய வேண்டிய நேரம் வரும்போது ஐஸ்வர்யா அவருக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்துவிட்டார். யாஷிகா மீது ஐஸ்பேக் வைக்கலாம் என விஜயலக்ஷ்மி பிரிட்ஜில் வைத்துவிட்டு வந்தார். ஆனால் ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் அதை எடுத்து வெளியே வைத்துவிட்டார். இது தொடர்பாக மற்ற போட்டியாளர்கள் அவருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிலையில் அடுத்த வாரம் யார் பைனல் போகக்கூடாது என போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கேட்டார். அதற்கு ஐஸ்வர்யாவின் பெயரை தான் பலரும் கூறினார். அவர் இன்று செய்த தில்லுமுல்லு பற்றி தான் அனைவரும் குறைகூறியுள்ளனர்.