Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியே வாங்க..நான் எவ்ளோ பெரிய ரவுடினு காட்றேன்! ஐஸ்வர்யா-யாஷிகா கேவலமான பேச்சு

பிக்பாஸ் 2வது சீசனில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகியோர் கூட்டணி சேர்ந்து மிக மோசமாக நடந்துவருகின்றனர். அவர்களுக்கு எதிராக ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி கூட்டணி சேர்ந்துள்ளனர். பாலாஜி மட்டும் தனியாக நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்.

டாஸ்கில் ஐஸ்வர்யா மற்றும் விஜயலக்ஷ்மி இடையே சண்டை நடந்தது. "என்னை தைரியம் இருந்தால் தொட்டு பாரு" என ஐஸ்வர்யா கூற, கோபமான விஜயலக்ஷ்மி "இப்படி பேசினால்.. நான் ரெட் கார்டு வாங்கிட்டு வெளியே போவேன்" என கூறினார்.

அதன் பின் டாஸ்க் இடைவேளையில் வெளியில் அமர்ந்து பேசிய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா மிக அருவருக்கத்தக்க வகையில் பேசிக்கொண்டனர்.

யாஷிகா: மவனே முடிச்சிடலாம்.. வெளியே வந்த முடிச்சிடலாம்.
ஐஸ்வர்யா: வாடா வெளியே வா
யா: இந்த கேட் தாண்டி வாங்க எப்படி வெரட்டி வெரட்டி அடிக்கிறேன்னு பாருங்க. இங்க பிக்பாஸுக்காக அமைதியா இருக்கோம். நான் எவ்ளோ பெரிய ரவுடி. கல்லை தூக்கி எல்லாம் அடுப்பேன் ரோட்லலாம்.
ஐ: நான் கைல கெடைச்சதெல்லாம் வெச்சு அடிப்பேன்.
யா: இருக்கிறது ஒரு நாள்.. தவட-லாம் திரும்பியிருக்கும்.
(இருவரும் விஜயலக்ஷ்மி பற்றித்தான் இப்படி பேசியுள்ளனர்)
loading...