Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெயர் உட்பட பல பொய் சொல்லி பிக்பாஸில் நுழைந்துள்ள நபர்! அதிர்ச்சியில் நிர்வாகம்

தமிழ் பிக்பாஸ் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் ஹிந்தி பிக்பாஸ் கடந்த வாரம் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஹிந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.

இந்த பிக்பாஸில் தமிழ் பிக்பாஸை போல வெறும் சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் சிலரும் ஜோடிகளாக கலந்து கொள்வர். அப்படி கலந்து கொண்ட ஜோடி தான், ஷிவாஷிஷ் மிஷ்ரா- சௌரப் பட்டேல்.

இவர்கள் உள்ளே சென்று ஒரு வாரமாக உள்ள நிலையில் தற்போது இவர்கள் பிக்பாஸில் சொன்ன தகவல்கள் பற்றி தற்போது தான் ஒரு உண்மை சிக்கியுள்ளது.

அது என்னவென்றால், இந்த ஷிவாஷிஷ்- சௌரப் ஜோடி ஷோவில் சொன்ன தகவல்கள் அனைத்தும் பொய்யாம். அதாவது ஷிவாஷிஷின் பாட்னரான சௌரப்பின் உண்மையான பெயரே இது இல்லையாம்.

அது மட்டுமில்லாமல் விவசாயி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட அவர் உண்மையில் சினிமாவில் துணை casting director ஆக பணிப்புரிந்தவராம். இவர் ஏன் இந்த பொய்களை கூறினார் என தெரியவில்லை. இதனால் இந்த ஜோடி வீட்டை விட்டு வெளியேற்றப்பட கூடும் என பேசிக்கொள்ளப்படுகிறது.

loading...