Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐஸ்வர்யா தான் 2வது சீசன் ஜூலியா? கமல்ஹாசன் இப்படி சொல்லிவிட்டாரே

பிக்பாஸ் முதல் சீசனில் ஜூலி மிகமோசமான எதிர்ப்பை சந்தித்தார். அதுபோலவே இந்த 2வது சீசனில் ஐஸ்வர்யா ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் கெட்ட பெயரை சம்மதித்துள்ளார்.

இன்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த கமல் போட்டியாளர்களிடம் உரையாடினார். அப்போது அவர் இந்த வாரம் ஐஸ்வர்யா செய்த சில விஷயங்கள் பற்றி விமர்சித்தார்.

ஒருவர் அடிபட்டு கிடைக்கும்போது ஐஸ்வர்யா மட்டும் டாஸ்க் செய்துகொண்டிருந்ததை கடிந்த அவர், "வெளியில் வா.. கல்லால் அடிக்கிறேன்" என சொன்னதையும் கண்டித்தார்.

அதன்பின் பேசிய கமல் "உள்ளே இருக்கும்வரை எதுவும் தெரியாது. வெளியில் வரும்போது தான் தெரியும். முதல் சீசனில் 'இவரை பார்த்துக்கொள்ளுங்கள்' என மக்களிடம் கூறி போட்டியாளர் ஒருவரை வெளியில் "அனுப்பிவைத்தேன். அது போல் தான் உங்களுக்கும் நடக்கலாம்" என ஐஸ்வர்யாவிடம் கூறினார்.

ஜூலி சந்தித்த எதிர்ப்பு பற்றித்தான் கமல் இப்படி கூறியுள்ளார்.