Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ஜெயிக்கப்போவது யார், இதுவரை வந்த வாக்குகளில் யார் முன்னிலை- தொலைக்காட்சியே வெளியிட்ட தகவல்

கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அதே குழப்பம் இப்போதும் இருக்கிறது. ஆரவ்-சினேகன் இவர்களில் யாரோ ஜெயிப்பார்கள் என்று மக்கள் முதல் சீசனில் கணித்தார்கள். 2வது சீசனில் ரித்விகா அல்லது ஐஸ்வர்யா ஜெயிப்பார்கள் என்று கருதுகின்றனர்.

ஒரு வாரம் தான் இருக்கிறது நிகழ்ச்சி முடிய, போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் வாக்களித்து வருகின்றனர். தற்போது நிகழ்ச்சி ஒளிபரப்பும் தொலைக்காட்சி இப்போது வரை இறுதி போட்டியாளர்களில் யாருக்கு எவ்வளவு வாக்குகள் வந்துள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் அதிக வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருக்கிறார் ரித்விகா. முழு விவரம் இதோ,

  • ரித்விகா- 17 லட்சத்திற்கு மேல்
  • ஐஸ்வர்யா- 9 லட்சத்திற்கு மேல்
  • விஜி- 5 லட்சத்திற்கு மேல்
  • ஜனனி- 4 லட்சத்திற்கு மேல்

இதில் இன்னொரு ஷாக் என்னவென்றால் WildCard போட்டியாளராக உள்ளே வந்த விஜி மூன்றாம் இடத்திலும் நிகழ்ச்சியில் முதலில் இருந்து இருக்கும் ஜனனி 4வது இடத்திலும் இருக்கிறார். இத்தனைக்கு இறுதி போட்டிக்கு முதலில் தேர்வானது ஜனனி தான்.

Bigg Boss Vote Tamil - Finale