Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அநியாயமாக ஏமாந்து போன ஜனனி- வருந்தும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க பரபரப்பின் உச்சமாக ரசிகர்கள் வெயிட்டிங். இன்று யார் ஜெயிப்பார்கள், நிகழ்ச்சியில் என்னென்ன சுவாரஸ்யங்கள் இருக்கும் என்பது எல்லாம் ரசிகர்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இரவு 8 மணிக்கு நிகழ்ச்சியின் இறுதிகட்டம், முடிவு பிக்பாஸ் கையில் உள்ளது. நேற்று நிகழ்ச்சியில் இருந்து 4வது போட்டியாளராக வெளியேறியவர் ஜனனி. நிகழ்ச்சியின் ஒரு போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் தற்போது ரூ. 10 லட்சத்தை பெற்றுவிட்டு வெளியேறிவிடலாம் என்று பிக்பாஸ் கூறியிருந்தார்.

இதனை பயன்படுத்த யாரும் முன்வரவே இல்லை. இப்போது ஜனனி வெளியேறியதை பார்த்த ரசிகர்கள் அப்போதே பிக்பாஸ் சொன்னது போல் ரூ. 10 லட்சத்தை வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று புலம்பி வருகின்றனர்.