கனாகாணும் காலங்கள், செம்பருத்தி சீரியலில் கலக்கும் கார்த்திக்கின் மனைவி இவர் தான்!
எப்போதும் சீரியல் என்றாலே அழுகை, குடும்பம் என்ற வட்டத்திலிருந்து விலகி பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை பிரதிபலித்த தொடர் கனா காணும் காலங்கள்.
பிரபல தொலைக்காட்சியில் வெளியான இந்த தொடரில் கதாநாயகனாக நடித்தவர் கார்த்திக். இவர் அடுத்ததாக ஆபிஸ் சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது செம்பருத்தி சீரியலில் ஆதியாக நடித்துவருகிறார். இவரின் ரொமான்ஸ் காட்சிகள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக மாறிவருகிறது.
மேலும் இவர் கனா காணும் காலங்கள் சீரியல் முடிந்தபின்னர் யாசினி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவரின் மனைவியின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.