Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆபாசம்! இப்படியெல்லாமா செய்வது - அத்துமீறும் டிவி சானல்?

தற்போது டிவி சானல்களில் அடுத்தடுத்து புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள் இடம் பெற்று வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் பல மொழிகளிலும் இடம் பெறுகிறது.

ஏற்கனவே தமிழில் ஆர்யா மாப்பிள்ளையாக பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளவது போல காண்பித்து கடைசியில் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்சன் புதிதாக தொடங்கியுள்ளது. இதை நடிகர் பிரதீப் மச்சிராஜு மாப்பிள்ளையாக இருக்கிறார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் வயது வந்தோர் மட்டுமே பார்க்கும்படியான விசயங்களை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

மேலும் கலந்துகொண்டுள்ள பெண் போட்டியாளர்களின் உடலை அதிகம் காட்டி வருகிறார்களாம். அத்துடன் பிரதீப் அந்த போட்டியாளர்களின் உதடு, மூக்கு, கண்கள், காது என உறுப்புகளை வைத்து பெயர்களை கண்டுபிடிக்கும் படியாக டாஸ்க் கொடுத்து வருகிறார்களாம்.

TRP க்காக இப்படியெல்லாம் செய்வதா என சர்ச்சை எழுந்துள்ளது.