Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

4 மணிநேரம் தூங்கி 1000 ரூபாயில் குடும்பத்தை நடத்தும் சிறுமி - கண்ணீர் சிந்தவைத்த சோகக்கதை - பெயர் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். நடிகர்சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பொறுப்பில் இருக்கும் இவர் சன் தொலைக்காட்சியில் நாம் ஒருவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் வாழ்க்கையில் அடிபட்டு இயலாத நபர்களுக்கு உதவி வருகின்றனர். இந்த வாரத்தில் அனிதா என்ற சிறுமிக்காக நடிகர் சூரி தன்னுடைய ஹோட்டலில் சர்வராக வேலை செய்து பணத்தை திரட்டினார்.

8வது படித்துக்கொண்டிருக்கும் இந்த சிறுமியின் தந்தை ஒரு விபத்தில் அடிபட்டு இடுப்புக்கு கீழ் செயல்இழந்து விட்டது. இதனால் இவரது தாயும் மனநிலை பாதிக்கப்பட்டார். இந்த குடும்பத்தையே 3வது படிக்கும் போதிலிருந்து தன்னந்தனியாக படித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இதுவரை இந்த சிறுமி மாற்றுத்திறனாளிகளுக்காக இவரது தந்தைக்கு வரும் 1000 ரூபாயில் குடும்பத்தை நடத்தியுள்ளார். தினமும் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவாராம்.

கண்ணீர் வரவைக்கும் இந்த சிறுமியின் கதையை கேட்ட அனைவரும் நெகிழ்ந்து போய்விட்டனர். இந்த சிறுமியின் கல்விச்செலவை ஐசரி கணேஷ் ஏற்றுக்கொண்டார். மேலும் அந்த பெண்ணுக்கு ரூ. 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய அனிதாவின் பெயரில் இருக்கும் மற்றொரு சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய விஷால், சூரி மற்றும் உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.