Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ருதிஹாசனின் ஹலோ சகோ நிகழ்ச்சியின் இந்த வார சிறப்பு விருந்தினர் இவர்களா?- சும்மா கலக்கலா இருக்குமே

நடிகர்கள் பலர் இப்போது தொலைக்காட்சி பக்கம் அதிகம் வர ஆரம்பித்துவிட்டனர். முதலில் சொல்ல வேண்டும் என்றால் கமல்ஹாசன், அவர் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மாபெறும் ஒரு ஹிட் ஷோ.

அவரை தொடர்ந்து விஷால், பிரசன்னா, வரலட்சுமி என பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகின்றனர். நடிகை ஸ்ருதிஹாசனும் சன் தொலைக்காட்சியில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

அதில் முதல் விருந்தினராக யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சிவா பங்குபெற்றனர். இந்த வார ஷோவில் தேவயானி அவரது தம்பி நகுல் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் புரொமோ மிகவும் கலகலப்பாக உள்ளது.