Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாணி ராணி சீரியல் விசயத்தில் ராதிகா இதை மட்டும் செய்யமாட்டாராம்! இப்படியுமா? அய்யோ நம்புங்க - இதுதான் உண்மை

வாணி ராணி சீரியல் பல ரசிகர்கள், ரசிகைகளை கொண்டது. சன் தொலைகாட்சியின் சீரியல்களில் இதுவும் முக்கியமான ஒன்று சீரியல் தொடங்கி விரைவில் 1750 வது எபிசோடை தொடவுள்ளது.

பல சீரியல்களை தயாரித்து நடித்ததன் மூலம் சின்னத்திரையில் புரட்சி செய்தவர் ராதிகா. இன்னும் மனதில் சித்தி, அண்ணாமலை என சில சீரியல்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

இப்போது TRP விசயத்தில் மற்ற சானல்கள் கடும் போட்டியில் இருக்கிறார்கள். வியாழக்கிழமை வந்தால் போது அவர்களுக்கு டென்சன் தான். ரேட்டிங்க்ஸ் சற்று குறைந்தால் கதையை மாற்று என்ற நிலை தான்.

அந்த வகையில் ராதிகா இந்த TRP யை பற்றி பேசவே மாட்டாராம். எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்பதோடு சீரியல் கதை எழுதிய குமரேசன், ரத்னம் ராகவன் ஆகியோரின் விருப்பத்திற்கே விட்டுவிடுவாராம்.

இதை சொன்னால் மற்றவர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் இதுவே உண்மை. இதனால் தான் இந்த சீரியல் நல்ல சீரியல் என்ற பெயரோடு 6 வருடங்கள் கழித்து ஓடுகிறது என பெருமைப்படுகிறார்கள் இதன் எழுத்தாளர்கள்.