Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜா ராணி சீரியல் செம்பாவை வைத்துக்கொண்டே இப்படி இரட்டை அர்த்தத்தில் பேசுவதா! தெறிச்சு ஓடிய நிகழ்ச்சி தொகுப்பாளர்!

சினிமாவை விட சீரியலை சீரியஸாக பார்க்கும் காலமாக மாறிவிட்டது என சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சீரியலுக்கு மனதை பறி கொடுக்காமல் இருக்க முடியாது.

அந்த வகையில் அண்மைகாலமாக பலரின் மனங்களை ஈர்த்த சீரியல் ராஜா ராணி. இதில் நடித்த சஞ்சீவ், ஆல்யா மானஸா ஜோடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்கள்.

இதில் செம்பா சின்னய்யா சின்னய்யா என கூப்பிடுவது செம ட்ரெண்டாகிவிட்டது. அவர்கள் இருவரும் ஜோடியாக அது இது எது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

இதில் வட கறி குருமா வைக்க என்னென்ன பொருட்கள் தேவை என கேட்க, அதற்கு செம்பா சொன்ன பதிலால் தெறித்து ஓடிவிட்டார் நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா. மேலும் ரிமோட் பேட்டரி என்ற பெயரில் அவர்கள் இரட்டை அர்தத்தில் பேசுவது சிலருக்கு முகம் சுளிப்பாக இருந்திருக்கும் தானே.