தொகுப்பாளர் கோபிநாத்தை பாலோ செய்தால் தோற்றுப்போவோம்- சிவகார்த்திகேயன் அதிரடி
தமிழ் தொலைக்காட்சி எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட தொகுப்பாளர்கள் ரசிகர்களிடம் பிரபலம். அதிலும் ஒரே தொலைக்காட்சியை சேர்ந்த பலர் தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
அப்படி கோபிநாத், டிடி, ரம்யா, பாவனா, மா.கா.பா, ரியோ என பலரை கூறிக்கொண்டே போகலாம். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்-கோபிநாத் தங்களது பழைய நியாபகங்கள் பற்றி பேசினர்.
அப்போது சிவகார்த்திகேயன்,எனக்கு முதலில் தொகுப்பாளர் வாய்ப்பு வந்தபோது ஒன்றை ஒன்று தான் முடிவு செய்தேன். கோபிநாத் அவர்கள் போல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலோ பாலோ செய்தாலோ நாம் காலியாகிடுவோம்.
அவர் அளவிற்கு புத்திசாலிதனமாக நம்மால் செய்ய முடியாது என்று முடிவு செய்தேன். அதனால் தான் அவருக்கு எதிராக நான் ரூட்டைப் போட்டேன் என்று கலகலப்பாக பேசினார்.