Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் புதிய படத்தில் நடிக்கும் பாண்டேயின் அடுத்த அதிரடி! எதிர்பாராத ஸ்பெஷல்

சினிமாவுக்கு நிகராக இப்போது டிவி சானல்களில் வருபவர்களுக்கு ஒரு மாஸ் உருவாகிவிடுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சி நேர்காணல் மூலம் பிரபலமானவர் ரங்கராஜ் பாண்டே.

சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் பலரை நேர்காணல் செய்து அதிரடி கேள்விகளால் திணறவைத்தவர். மீம்ஸ் கூட இவரை பற்றி வந்தது.

அண்மையில் அவர் முக்கிய சானலை விட்டு விலகினார். மேலும் அஜித்துடன் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவர் மற்றொரு செய்தி சானலில் களத்தில் இறங்குகிறாராம். பேட்ட பராக் பராக் என பேட்ட படத்தில் சொல்வது போல இவருக்கு பாண்டே பராக் பராக் என அறிவிப்பை வெளியிட்டுருக்கிறார்கள்.