Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருட முடிவில் எந்த தொலைக்காட்சி முதலிடம் தெரியுமா? தொடர்ந்து முதலிடம் பிடித்த சீரியல்!

தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் தற்போது அதிகளவிலேயே இருக்கிறது. அதனால் தான் கேபிள், டிடிஎச் கட்டணத்தை பலமுறை தொடர்ந்து அதிகரித்தும் மக்கள் இன்னும் அதிகளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் கட்டி பார்த்து வருகின்றனர்.

தொலைக்காட்சிகளில் அதிகம் பார்க்கப்படுவது சீரியல்கள் தான். அந்தவகையில் இந்த வருட முடிவில் வந்துள்ள டிஆர்பி லிஸ்ட் படி செம்பருத்தி சீரியல் தான் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் உள்ளது. அடுத்த மூன்று இடங்களை நாயகி, கல்யாண வீடு, நந்தினி என சன்டிவி சீரியல்கள் பிடித்துள்ளன. ஐந்தாவது இடத்தை யாரடி நீ மோகினி பிடித்துள்ளது.

தொலைக்காட்சிகளில் வழக்கம் போல சன்டிவி தான் நம்பர் 1 இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் விஜய் டிவியும், ஜீதமிழும் உள்ளன.

4வது இடத்தில் கே டிவியும், 5வது இடத்தில் ஆதித்யாவும் உள்ளன.