Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகை பிரீத்தியா இது! இப்படி ஆகிவிட்டாரே - ஷாக் ஆக்கிய அவரின் லேட்டஸ்ட் தோற்றம்

தமிழ் சிரீயல் பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல அன்பு இருக்கின்றது. இதில் நடிகை பிரீத்தியை பலருக்கும் தெரிந்திருக்கும். பாலசந்தரின் பந்தம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார். மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன் சீசன் 2 ல் பங்கேற்றார்.

விஜய்யின் நெருங்கிய நண்பரும் பல சீரியல்களின் கலக்கி வரும் நடிகரான சஞ்சீவை திருமணம் செய்துகொண்டார். சில காலம் இவரை டிவி பக்கம் காணவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

பின் பொம்மலாட்டம், ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களில் அவரை காணமுடிந்தது. அவருக்கு லயா என்ற மகளும், ஆதவ் என்ற மகனும் இருக்கின்றார்கள்.

அண்மையில் முக்கிய தமிழ் சானலில் அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள் இப்படி குண்டாகிவிட்டாரே கமெண்ட் அடித்து வருகிறார்கள்.